திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்னதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அன்பில் மகேஸ்யை வாழ்த்தி கட்சி நிர்வாகிகள் பேனர் வைத்திருந்தனர். இன்று காலை அந்த சாலையில் நடந்த அந்த இளைஞர் ஒருவர் திடீரென வாழத்தார் துண்டை எடுத்து பிளக்ஸ்ல் அடித்து கிழித்துவிட்டார்.
உடனே அங்கிருந்து திமுக நிர்வாகிகள் விரட்டி அவரை பிடித்து நடுரோட்டில் தர்ம அடி கொடுத்து துவைத்து எடுத்தனர். அவரது சட்டை கிழிகிழிய அடி விழுந்தது.காவல் நிலையம் அருகே இச்சம்பவம் நடைபெற்றதால் காவல்துறை உடனடி அவரை பிடித்து நிலையம் உள்ளே அழைத்து சென்றனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அவருக்கு அந்த பிளக்ஸ் இருந்த வாசகத்தின் மீது கோபம் என காவல்துறை விசாரணையில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் பிறந்தநாளுக்கு வரவேற்பு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை ஒருவர் கிழித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments