Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கனிமங்கள் திருத்த மசோதா நிறைவேற்றம்: திருச்சி எம்.பி. துரை வைகோ கடும் கண்டனம்

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை (Mines and Minerals (Development and Regulation) Amendment Bill, 2026) நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு (Standing Committee) அனுப்பி விரிவாக ஆய்வு செய்யவும், மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

மேலும், இம்மசோதாவின் Section 9D-ல் மாநிலங்களின் வரி விதிக்கும் அதிகாரத்தைப் பாதுகாக்கும் வகையில், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ நேற்று (11.08.2026) தனிப்பட்ட முறையில் நாடாளுமன்ற மக்களவை அவைத்தலைவரிடம் திருத்த முன்மொழிவைச் சமர்ப்பித்திருந்தார்.
ஆனால், இக்கோரிக்கைகளை ஏற்காமலும், மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டறியாமலும், நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பாமலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநிலங்களின் நிதிசார் தன்னாட்சியையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதிக்கும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு மதிமுகவைச் சேர்ந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *