திருச்சிராப்பள்ளி பட்டர்ஃபிளைஸ் ரோட்டரி கிளப் மற்றும் அடுத்த ஜெனரல் ரோட்டரி கிளப் உடன் இணைந்து 14 ரோட்டரி சங்கங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிகழும் வன்முறையை எதிர்க்கும் விழிப்புணர் பேரணியை ஏற்பாடு செய்தது. இதில் திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, காவேரி கல்லூரி, சென் ஜோசப் கல்லூரி மற்றும் ரொட்டேரியன் நான் ரொட்டேரியன் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள் இதில் சிறப்பு விருந்தினராக RID 3000 ஆளுநர் Rtn. J. கார்த்திக் அவர்கள் கலந்து கொண்டார்கள் சிறப்பு அழைப்பாளராக பாரதிதாசன் யூனிவர்சிட்டி நாட்டு நலப்பணித் திட்ட பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராமஜெயம் கலந்து கொண்டார்.
இதில் நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் குழந்தைகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் அதை தடுக்கும் முறைகள் பற்றி வீதி நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
பேரணி திருச்சி ஸ்டுடென்ட் ரோடு ஆரம்பிக்கப்பட்டு ஐயப்பன் கோயில் வழியாக வெஸ்ரி ஸ்கூல் வரை நிறைவு பெற்றது.
இந்நிகழ்ச்சி பாதுகாப்பாகவும் தடையின்றியும் நடைபெற முக்கிய பங்காற்றிய காவல்துறைக்கு எங்கள் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
இந்த நிகழ்ச்சியை திருச்சிராப்பள்ளி பட்டர்ஃபிளைஸ் ரோட்டரி கிளப் தலைவர் டாக்டர் S.நித்யா/செயலாளர் M.ரேவதி மற்றும் திருச்சிராப்பள்ளி ரோட்டரி கிளப் அடுத்த ஜெனரல் தலைவர் A.அப்துல் ரஹீம்/செயலாளர் R.கோபிகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments