திருச்சிராப்பள்ளி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செஷாங் சாய், இ.கா.ப. அவர்களின் கடுமையான உத்தரவின் பேரில், நவம்பர் 25, 2025 அன்று திருச்சி மாவட்டக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் (COTPA) விற்பனை செய்பவர்களைக்

கண்டறியும் சிறப்புத் தேடுதல் வேட்டை தனிப்படையினரால் நடத்தப்பட்டது. இச்சோதனையின் விளைவாக, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த மற்றும் கடத்திச் சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். இராமச்சந்திரர், திருவெறும்பூர், துவரங்குறிச்சி மற்றும் துவாக்குடி காவல் நிலைய எல்லைகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், ஐந்து வெவ்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் கைது

செய்யப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கைகளில், மொத்தம் 196.735 கிலோகிராம் எடையுள்ள, சுமார் ₹2,11,070/- மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் ரோஸ்டன் சவுரியம்மாள் (46), செல்வகுமார் (40/25), ராமசாமி (48), வையாபுரி ராஜா (48), மற்றும் தேவதாஸ் (25) ஆகியோர் அடங்குவர். கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அரசால்

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைச் சட்ட விரோதமாக விற்பனை செய்வோர் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இக்குற்றச் செயலில் மீண்டும் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments