வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் பொருட்டு, “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 12.08.2025 அன்று முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் வாயிலாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 1,211 நியாய விலைக் கடைகளைச் சேர்ந்த 86,112 குடும்ப அட்டைகளில் உள்ள 1,03,855 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அடுத்து வரும் 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 02.12.2025 மற்றும் 03.12.2025 ஆகிய தேதிகளில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று,
குடிமைப் பொருட்களை விநியோகம் செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் முதலமைச்சர் தாயுமானவர் திட்டம் மூலம் இல்லம் தேடி குடிமைப் பொருட்கள், 02.12.2025 மற்றும் 03.12.2025 ஆகிய தேதிகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த இரண்டு தினங்களில் பயனாளிகள் குடிமைப் பொருட்களை அவர்களின் இல்லங்களிலேயே பெற்றுக் கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments