முசிறி அருகே காட்டுப்புத்தூரில் ஸ்ரீ பிடாரி மதுர காளியம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக வந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பெண்கள் மட்டும் இளைஞர்கள் மேளதாளங்களுடன் நடனம்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ பிடாரி மதுர காளியம்மன் கோவிலில் கடந்த 60 ஆண்டுக்கு மேலாக தூக்கு தேர் இல்லாததால் அப்பகுதி ஊர் பொதுமக்கள் புதிய தூக்கு தேர் செய்து வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து காட்டுப்புத்தூர், கணபதிபாளையம், சீத்தப்பட்டி, காந்தி நகர், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக ஸ்ரீ பிடாரி மதுரகாளியம்மன் கோவிலுக்கு வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க புதிய தேர் வெள்ளோட்டத்திற்காகவும், தேர் அலங்காரம் செய்வதற்காகவும் வாண வேடிக்கையுடன் பூத்தட்டுகளை ஊர்வலமாக கொண்டு சென்றனர், ஊர்வலத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக நடனமாடி சென்றனர்,
பின்னர் அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் காட்டுப்புத்தூர், சீத்தப்பட்டி, கணபதிபாளையம், காந்திநகர், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பூத்தட்டுகளை வழங்கி வழிபட்டனர், தொடர்ந்து இன்று பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேர் வெள்ளோட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments