சமூக ஊடகத்தில் பதிவிடுவதற்கு முன்பு யோசிக்க வேண்டும் – மாநகர காவல் ஆணையர் மாணாக்கர்களுக்கு அறிவுரை
பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி அனைவரும் தினசரி புத்தகம் வாசிப்பதை கடைபிடிக்க வேண்டும் மேலும் சமூக ஊடகங்களில்வரும் போலி செய்திகளை மற்றும் மோசடி லிங்குகளை தவிர்க்கவேண்டும் என்பதனை வலியுறுத்தி 2000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் இருந்து மத்திய பேருந்துநிலையம் வரை கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கொண்டு, பேரணியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
முன்னதாக இந்த பேரணியை மாநகர காவல் ஆணையர் காமினி அவர்கள் கொடியசைத்து தொடங்கிவைத்தார். மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஆணையர்… நாங்கள் எல்லாம் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் 90 ஆம் ஆண்டுகளில் கல்லூரி படிக்கும்போது இன்டர்நெட் வசதிகூட இல்லை, அமெரிக்கன் கான்சிலேட் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகங்களில் மாணவர்களுக்கு இலவச மெம்பர்ஷிப் வசதி இருந்தது, அதுபோன்று உலகத்தரம் வாய்ந்த கன்னிமரா நூலகத்திலும் சென்று படித்து, அங்கு புத்தகங்களில் நோட்ஸ் எடுத்துதான் இதுபோன்ற உயர் பதவிக்கு வந்துள்ளோம்.
பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் எந்த ஒரு சோசியல் மீடியாவும் கிடையாது அதனால் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்பு இல்லை.
சமூக ஊடகங்கள் தீங்கு ஏற்படுத்துவதாக கூறவில்லை, அது ஒரு பெரிய வரம், அதனை சரியாக பயன்படுத்த வேண்டும். சமூக ஊடகத்தில் பதிவிடுவதற்கு முன்பு யோசிக்க வேண்டும், அதே போன்று லைக் – ஷேர் திறமையல்ல நமது நடத்தைதான் திறமை, இதனை மாணவர்களாகிய நீங்கள் பின்பற்றுவதுடன் சகோதர, சகோதரிகள் மற்றும் உறவினர்களுக்கு கொண்டுசேர்க்க வேண்டும் என்றார். நூலகங்களை பயன்படுத்த வேண்டும் மேலும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments