மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 1 முதல் கட்டாய இ-பைலிங் முறையை அமல்படுத்தவேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவிப்புக்கு எதிர்ப்புத்தெரிவித்தும், தமிழகத்தில் வழக்கறிஞர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகிவரும் நிலையில், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை விளம்பர திமுக அரசு உடனடியாக அமல்படுத்தவேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க கூட்டு நடவடிக்கைகுழு சார்பில் இன்று நீதிமன்ற பணி புறக்கணிப்பு நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டத்திலும் இன்று வழக்கறிஞர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், அதேநேரம் கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தினால் நீதிமன்ற பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments