“டிட்வா” புயல் காரணமாக திருச்சி மாவட்டத்திற்கு கனமழைக்கான “ஆரஞ்சு அலொட்” விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், காவிரி கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் மற்றும் சலவை தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
புயல், மழை காலங்களின்போது பொதுமக்களை தங்க வைக்க ஏதுவாக 154 பாதுகாப்பான மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24×7 மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டில் உள்ளது. இக்கட்டுப்பாட்டு அறையின் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கோ அல்லது 0431-2418995 என்ற எண்ணிற்கோ
புயல், மழை, வெள்ளம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments