திருச்சி, நவ.28– தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசின் தொகுப்பு சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் டிசம்பர்.8 அன்று திருச்சி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விசிக தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய பாஜக அரசு, தொழிலாளர் சட்டங்களை 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றியதை கண்டித்தும், தொழிலாளர் உரிமைகளை முற்றிலுமாக நீர்த்துப் போகச் செய்யும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. ஆர்ப்பாட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
சிபிஎம் அலுவலகம், வெண்மணி இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு சிபிஐ-எம் மாநில காட்டுபாட்டுக் குழு தலைவர் எஸ். ஶ்ரீதர் தலைமை வகித்தார். சிபிஐ(எம்) மாவட்ட செயலாளர்கள் கோவி. வெற்றி செல்வம், கே.சிவராஜன், சிபிஐ மாவட்ட செயலாளர்கள் எஸ்.சிவா, செ.ராஜ்குமார், சிபிஐ(எம்.எல்) லிபரேசன் மாவட்ட செயலாளர் கே.ஞானதேசிகன், விசிக மண்டல செயலாளர் தமிழாதன், விசிக மாவட்டச் செயலாளர்கள்
ஆ.கனியமுதன், புல்லட் லாரான்ஸ், குரு.அன்புச்செல்வன், மா.கலைச்செல்வன், சீ.சக்தி ஆற்றல் அரசு உள்ளிட்ட அனைத்து இடதுசாரி மற்றும் விசிக கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments