திருச்சி விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் 160 பயணிகளுடன் துபாய் புறப்பட்டு சென்றது மதியம் 3:15 மணிக்கு புறப்பட்ட விமானம் வானில் பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு மேலும் விமானத்தை தொடர்ந்து பறந்தால் ஆபத்து ஏற்பட்டுவிடும் என முன்னெச்சரிக்கையாக தரையிறக்க விமானிகள் முற்பட்டனர் சுமார் 30 நிமிடம் வானில் வட்டமிட்டு கொண்டே இருந்தது
உள்ளே இருந்த பயணிகளுக்கும் சந்தேகம் வந்தது புறப்பட்ட விமானம் இன்னும் நமது ஊருக்கு அருகாமலேயே வட்டமடித்து கொண்டிருப்பது ஏன் என்று வானத்தில் உள்ள ஊழியரிடம் கேள்வி எழுப்பினர். ஒன்றும் பயப்பட வேண்டாம் மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே விமானம் தரையிறங்க உள்ளது என குறிப்பிட்டனர்.
3:55 மணிக்கு மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறுக்கான காரணங்கள் குறித்து பொறியாளர்கள் தயவு செய்து வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments