திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தனியார் சொகுசு பேருந்துகளுக்கென தனியாக பேருந்து நிலையம் ஏதும் இல்லை.
தனியார் சொகுசு பேருந்து நிலையம் இல்லாததால், மத்திய பேருந்து நிலைய பகுதி சாலை ஓரங்களில் போக்குவரத்து பயணிகளுக்கு இடையூறாக இப்பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி வரும் நிலையினை மாற்றும் விதத்தில், பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முணையம் அருகே சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் வெளியூர் செல்லும் தனியார் சொகுசு பேருந்து நிலையம் (OMNI Bus Stand) ரூ.17.60 மதிப்பீட்டில் 30849 சதுரடி பரப்பளவு பேருந்து போக்குவரத்து இடம் – 142945 சதுரடி பரப்பளவு.
மொத்த பேருந்து நிறுத்த தடங்களின் 58 எண்ணிக்கையில் இயக்கப்படும். பேருந்து நிறுத்த தடங்களின் எண்ணிக்கை – 34காத்திருப்பு பேருந்து நிறுத்த தடங்களின் எண்ணிக்கை – 24 இத்திட்டப்பணி 85 சதவீதம் முடிவடைந்து உள்ளது. விரைவில் மீதமுள்ள பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவரப்படும் என மேயர் அன்பழகன் அவர்கள் தெரிவித்தார்கள்
இந்த ஆய்வில் செயற்பொறியாளர் கே.எஸ். பாலசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் வேல்முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments