நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தமிழ்நாடு அரசு மூலதன மானிய நிதி 2023-2024 ஆண்டு கேப்பிட்டல் கிரவுண்ட் நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 11 கோடி 10 லட்சம் மதிப்பீட்டிலான ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் ஸ்ரீ ரங்கம் அரசு மருத்துவமனை எதிரே கட்டப்பட்டு வருகிறது.
இதனை மேயர் மு. அன்பழகன் அவர்கள் பொறியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் நேரில் பார்வையிட்டு பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்த புதிய பேருந்து நிலையம் 1.080 ஏக்கர் பரப்பளவு கொண்டது கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 34,218.47 சதுர அடி, தரைதளத்தில் 18, 535.45 சதுர அடியும், முதல் தளத்தில் 14,498 சதுர அடியும் கொண்டுள்ளது தரைதளத்தில் 8 பேருந்து நிறுத்தவும், 22 கடைகள் மற்றும் பயணிகள் காத்திருப்பு அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
முதல் தளத்தில் 260 நபர்கள் அமரும் வகையில் பல்நோக்கு சிறிய அரங்கம் கட்டப்பட்டுள்ளது.
மேலும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக கழிப்பிட வசதிகளும் உள்ளது. சிற்றுண்டி அரங்கத்தில் உணவு அருந்து கூடமும் அமைக்கப்பட்டுள்ளது
பேருந்து நிலைய பணிகள் 95 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மேயர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வில் செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி,
மண்டல தலைவர் ஆண்டாள் ராம்குமார், உதவி ஆணையர் சசிகலா ,மாமன்ற உறுப்பினர்கள் முத்துக்குமார், ஜவகர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments