மதிப்பிற்குறிய K.அருள் ஜோதி, IRPFS , முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், தெற்கு ரயில்வே அவர்களின் உத்தரவின் பேரில், திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் மதிப்பிற்குறிய Prashant Yadav,IRPFS மற்றும் உதவி ஆணையர் Pramod Nair, ஆகியோர்களது மேற்பார்வையில், திருச்சி RPF ஆய்வாளர் ரமேஷ், திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, அவர்கள் தலைமையில்,
இன்று (06.12.2026) திருச்சி RPF வெடிகுண்டு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் சரவணன் (S.SARAVANAN,SIPF/BDS/TPJ), D.செல்வராஜா, ASIPF/CPDS/RPF/TPJ, A.இளையராஜா, HC/BDS/TPJ S.ஜெயவேல், HC/CPDS/TPJ, மற்றும் எம்.பிரசாந்த், Con/GRP/TPJ மற்றும் NIB/Trichy குழு, ஆகியோருடன், திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் சட்டவிரோதமான போதை பொருட்கள் கடத்தலுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேற்படி நடவடிக்கையின் போது திருச்சி பிளாட்ஃபார்ம் எண்.08ல் வந்து அடைந்த Tr.No..12663 ஹவுரா–திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில், நடத்திய சோதனையின் போது, ஒரு சந்தேகத்திற்கிடமான முறையில் உரிமை கோரப்படாத நான்கு shoulder and travelled bags கிடந்தது. அதை சோதனை செய்த போது, 36 kilos ரூ.18,00000/- மதிப்புள்ள கஞ்சா கடத்தல் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. பின்னர் விசாரணை செய்த போது அதனை உரிமைக்கோர எவரும் முன் வரவில்லை.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, தேவையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் தொடர்ந்த விரிவான விசாரணைக்காக SSI/NIB/திருச்சி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments