Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழா – அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் இன்று (06.12.2025) நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்த நிகழ்வு திருச்சிராப்பள்ளி கலையரங்கில் பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் பங்கேற்று 16 அரசு துறைகளின் சார்பில் 2058 பயனாளிகளுக்கு ரூபாய் 37 கோடியே 75 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஆதரவற்றோர் தனித்து வாழும் முதியோர், ஒற்றை பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், சிறப்பு குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் அனைத்து துறைகளின் மூலமாக பெற்றுத்தரப்படும் வகையிலான தாயுமானவர் திட்டத்தின் சார்பிலும், மகளிர் நலன் காக்கும் வகையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு பெருமளவில் கடனுதவிகள் மற்றும் சுழல்நிதி, சமுதாய முதலீட்டு நிதி, மகளிரை தொழில் முனைவோர்களாக உருவாக்குவது, சமுதாயத்தில் பெண்கள் வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று வாழக்கூடிய வகையிலான மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணத் திட்டம், மாணவர்கள் அறிவுசார் சமுதாயமாக திகழ்ந்திடும் வகையில் பல்வேறு கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் குறிப்பாக புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட முதலமைச்சரின் பல்வேறு சிறப்புத் திட்டங்களினால் தமிழ்நாட்டில் உள்ள மகளிர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எண்ணற்ற வகையில் பயனடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 87 பயனாளிகளுக்கு ரூபாய் 26 இலட்சத்து 58 ஆயிரம் மதிப்பீட்டிலும், பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு வன உரிமை பட்டா மற்றும் பழங்குடியினர் குடும்ப நல அட்டைகளையும், தாட்கோ சார்பில் 334 பயனாளிகளுக்கு ரூபாய் 281 இலட்சம் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் 508 பயனாளிகளுக்கு ரூபாய் 205 இலட்சம் மதிப்பீட்டிலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 819 பயனாளிகளுக்கு ரூபாய் 29 கோடியே 11 இலட்சம் மதிப்பீட்டிலும், வேளாண் மற்றும் பொறியியல் துறையின் சார்பில் 51 பயனாளிகளுக்கு ரூபாய் 56 இலட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் சார்பில் 40 பயனாளிகளுக்கு ரூபாய் 40 இலட்சம் மதிப்பீட்டிலும், தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூபாய் 11 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 70 பயனாளிகளுக்கு ரூபாய் 8 இலட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு தொழில் வணிக துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூபாய் 26 இலட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டிலும், வேளாண்மை துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூபாய் 23 ஆயிரம் மதிப்பீட்டிலும், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வு துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூபாய் 1 இலட்சம் மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூபாய் 26 ஆயிரம் மதிப்பீட்டிலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூபாய் 5 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலும், மாநகராட்சியின் சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூபாய் 2 இலட்சம் மதிப்பீட்டிலும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை (பொது விநியோகம்) திட்டத்தின் சார்பில் 43 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை என மொத்தம் 16 துறைகளின் சார்பில் 2058 பயனாளிகளுக்கு ரூபாய் 37 கோடியே 75 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள், மாநராட்சி மேயர் மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் செ.ஸ்டாலின்குமார், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, சீ.கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பாலாஜி, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) சுரேஷ், மாவட்ட ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மு.ரஞ்சித், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பா.ஸ்ரீராம், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *