திருச்சி மாநகர போதை பொருள் ஒழிப்புக்குழுவின் தலைவர்/மாநகர காவல் ஆணையர் ந.காமினி, அவர்கள் உத்தரவின்பேரில, மாநகர காவல்துறையினரால் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் – 25, நான்கு சக்கர வாகனங்கள் 4 என மொத்தம் 29 வாகனங்களை, நேற்று (11.12.2025) திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவல் துணை ஆணையர், தலைமையிடம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் பொது ஏலத்தில் விடப்பட்டன. மொத்தம் 29 வாகனங்கள் பொதுமக்களால் ஏலம் எடுக்கப்பட்டது. பொது ஏலம் மூலம் பெறப்பட்ட விற்பனை தொகையான ரூ.9,63,1164/-ஐ (GST வரிகள் உட்பட) அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.
மேலும் திருச்சி கே.கே.நகர் மாநகர ஆயுதப்படையில் உள்ள திருமண மண்டபத்தினை புதிய மரக்கதவுகள், நவீன கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடங்களை புனரமைப்பு செய்து காவல்துறை/அமைச்சு
பணியாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு திருமணம், காதணி போன்ற விழாவினை நடத்துவதற்கு ஏதுவாக புதுப்பொலிவுடன் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
மேற்படி திருமண மண்டபத்தினை முன்பதிவு செய்துக்கொள்ள திருச்சி மாநகர ஆயுதப்படை அலுவலகத்தினை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments