கே.கே நகர் குற்றப்பிரிவு காவல் நிலைய குற்ற எண் : 691/2025,U/s 331(4), 305 BNS வழக்கில், கடந்த 18.10.25-ந் தேதி சுவாமிநாதன் என்பவர் தனது வீட்டில் வைத்திருந்த சுமார் 32½ பவுன் தங்க நகைகள் திருடுபோய்விட்டதாக கொடுத்த புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்டு சிசிடிவி கேமாராக்களை ஆய்வு செய்து,
தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்த எதிரி சிவானந்தம் என்பவரை பிடித்தும் விசாரணை செய்ததில் மேற்படி திருடு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தும், எதிரிடமிருந்து சுமார் 18 ½பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் ரூ.3,62,000/- செல்போன், இருசக்கர வாகனம் மற்றும் வீட்டு சாதன பொருட்கைைள பறிமுதல் செய்யவும்,
எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய கே.கே நகர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர்க்கு உதவியாக இருந்து சிறப்பாக நற்பணி செய்த குழுவிற்கு,
இச்சிறந்த பணியை பாராட்டி திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர் அவர்களின் பணிப்பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments