என் வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை திருச்சி தெற்குமாவட்ட திமுகவிற்கு உட்பட்ட திருவெறும்பூர், கிழக்கு தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகரம், நகரம், ஒன்றிய பகுதியில் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு தலைகுனியாது என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் பூத் வாரியாக பரப்புரை கூட்டத்தை தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான
மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் தொடர்சியாக திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட
வார்டுஎண் 12 பாகம் எண் 13 பனைய குறிச்சி ஊராட்சி பாகம் எண் 2
கூத்தைப்பார் பேரூர் கழகம் பெல்ட் டவுன்ஷிப் பாகம் எண் 42
நவல்பட்டு ஊராட்சி பாகம் எண் 213
கிழக்குத் தொகுதி பொன்மலைப்பகுதி
வார்டு எண் 47 பாகஎண்199
முடுக்குப்பட்டி வார்டு எண் 49 பாகஎண் 173 ஆகிய பகுதிகளில்
துவக்கி வைத்து பரப்புரையை மேற்கொண்டார்.

இந்த நிகழ்வில் மாநகர செயலாளர் மு.மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் ஒன்றிய கழகச் செயலாளர்கள் கருணாநிதி, கங்காதரன் துவாக்குடி நகரச் செயலாளர் காயம்பு, பகுதிச்செயலாளர்கள் , தர்மராஜ்,,விஜயகுமார், வட்டக் கழக செயலாளர்கள் கிளைக்கழகச் செயலாளர்கள் மற்றும் BLA2 மற்றும் BLC உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பிரச்சாரத்தை பள்ளி கல்வி துறை அமைச்சரும், திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அங்கு வாக்குச்சாவடி முகவர்களிடம் எவ்வாறு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,

பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் மகளிர் உரிமை தொகை உள்ளது. ரூ.1000 பணத்தை வைத்து அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மற்ற மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படுவது தான் இந்த திட்டத்தின் வெற்றி.
திராவிட இயக்கம் ஆட்சிக்கு வரும் போது பெண்களின் மேம்பாட்டுக்கான திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம் அதனால் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளோம்.

ஆட்சிக்கு வந்த போது இருந்த நிதி நெருக்கடிகளை சரி செய்ய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அப்படி தான் மகளிர் உரிமை தொகையும் வழங்கப்படுகிறது. தேர்தலுக்காக இதை செய்யவில்லை திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். அடுத்த 15 ஆண்டுகாலம் நிச்சயம் திமுக தான் ஆட்சியில் இருக்கும். யார் என்ன விமர்சனங்கள் வைத்தாலும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது தொடர்பாக டெண்டர் விடப்பட்டுவிட்டது. டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments