திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உறையூர் பகுதி பெருமாள் கோவில் 39 வார்டு -ல் நடைபெற்ற என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பேசியபோது….
திருச்சியில் புதிய திட்டங்களை முதல்வர் வழங்கி இருக்கிறார். 9 சட்டமன்ற தொகுதியில் சமச்சீரான வளர்ச்சியை தளபதி அவர்கள் வழங்கி இருக்கிறார்கள். ஏற்கனவே ஒரு கோடியே 15 லட்சத்து 900 பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. நேற்று முதலமைச்சர் 36 லட்சம் பேருக்கு கூடுதலாக வழங்கியுள்ளார்

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதியில் மனுக்கள் 96 ஆயிரம் பேர் பெண்கள் வேண்டும் என்று விண்ணப்பித்தார்கள். 49 ஆயிரம் பேருக்கு தற்போது வழங்கி இருக்கிறார்கள். திருச்சி மாவட்டத்தில் 55% பேருக்கு மகளிர் உரிமைத் தொகை முதல்வர் வழங்கியிருக்கிறார். இனிமேல் கிடைக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பித்தால் அதையும் தருவதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை கூடுதலாக்கி தருவதாக அறிவித்திருக்கிறார்கள். இது பெண்களுக்கான ஆட்சியாக இருக்கிறது. மொத்தம் இரண்டு கோடி 26 லட்சம் பேர் ரேசன் கார்டு தாரர்களில் ஒரு லட்சத்து 80 ஆயிரம்

குடும்பங்களுக்கு நேரடியாக மாதம் தோறும் இத்திட்டங்களை முதல்வர் வழங்கி வருகிறார்கள். ஏற்கனவே வாங்கின வாக்ககுகளை தாண்டி கூடுதலான வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி கூட்டம் நடைபெறுகிறது. திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் பஞ்சப்பூர் பேருந்து நிலையம், காந்தி சந்தை புதிதாக கட்டும் பணி மற்றும் கோரையாற்றின் கரையோரமாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

டைட்டில் பார்க், சரக்கு முனையும் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட உள்ளன ஐயாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது. அதிகமான ஆதரவைத் தந்து என்னை மூன்று முறை மேற்கு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற வைத்துள்ளீர்கள். என் மீது இப்போது வழக்கு மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது நீதிமன்றத்தில் பதிலளித்து வென்று விட்டோம். தொடர்ந்து விசாரியுங்கள் என சொல்லி தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி இருக்கிறார்கள். அதிகமாக நான் சொல்ல விரும்பவில்லை கோர்ட்டில் இருப்பதால் நான் எந்த தவறும் செய்யவில்லை.

வேண்டுமென்றே ஒன்றிய அரசு
நேருவை அடித்ததால் இந்த பகுதியில் திமுகவை அடிக்கலாம் என்ற நோக்கத்தோடு இந்த பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் எந்த தவறும் செய்யவில்லை நிச்சயமாக தவறும் செய்ய மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.
நீதிமன்றத்தில் வழக்கு போட்டு உள்ளதால் விவரமாக பேச முடியவில்லை. ஐந்து முறை இந்த தொகுதியில் நின்று இருக்கேன். மூன்று முறை தேர்ந்து எடுத்திருக்கிறீர்கள். ஒரே ஆண்டில் இரண்டு முறை தேர்தலில் தோல்வி அடைந்திருக்கிறோம் அதுவும் சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம். இந்த தொகுதியில் மூன்றே முறை தான் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. நேருக்கு ஓட்டு போட்டு அனுப்பிய நீங்கள் நேரு இப்படி செஞ்சுட்டாரு என்று நினைக்க வேண்டாம் அந்த மாதிரி நினைச்சிட கூடாது என்பதற்காக தான் தற்பொழுது இதனை தெரிவித்துள்ளேன். தற்பொழுது நீதிமன்றத்தில் விசாரணை உள்ளதால் உங்களிடம் அதிகமாக பேச முடியவில்லை. நிச்சயமாக நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை உங்களிடம் சொல்லி கொள்கிறேன் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன், பகுதி செயலாளர் இளங்கோ உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments