ஜமால் முகமது கல்லூரி உடற்கல்வியியல் துறை சார்பில் முதலாவது மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான ஆடவர் பவளவிழா பூப்பந்தாட்டபோட்டி ஜமால் முகம்மது கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்கியது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், சென்னை, திருச்சி, கோவை, சேலம் மாவட்டங்களில் இருந்து 12 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றது.
லீக் மற்றும் சூப்பர் லீக் பிரிவுகளில் நடத்தப்படும் இப்போட்டிகளின், முதலில் நடைபெற்ற போட்டிகளில், திருச்சி ஜமால் முகமது கல்லூரி, கேர் பொறியியல் கல்லூரியை 35-18, 35-11 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது,
மற்றொரு போட்டியில் பொள்ளாச்சி எஸ்டிசி கல்லூரி, சேலம் மாருதி கல்லூரியை 35 – 28, 35 – 29 என்ற புள்ளிகணக்கில் வீழ்த்தியது, தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றுவருகிறது.
உடற்கல்வித்துறை இயக்குனர் ஷாகின்சா முன்னிலையில், திருச்சி மாவட்ட பூப்பந்தாட்டகழக தலைவர் குணசேகரன் மற்றும் செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் போட்டிகளை தொடங்கிவைத்தனர்.
இதில் வெற்றிபெறும் அணிகளுக்கு சுழற் கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments