திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் லதா பேபி கூடுதல் பொறுப்பாக வையம்பட்டி வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் ஏற்கனவே திருச்சி, மணப்பாறையைச் சேர்ந்த விமலா என்ற பள்ளி ஆசிரியை பணிபுரிந்துள்ளார். தற்போது பணிமாறுதலில் வேறு பள்ளிக்கு கடந்த ஜுலை மாதம் சென்றுவிட்டார்.
ஜுலை மாதத்தில் மேற்படி பள்ளி ஆசிரியை 4 நாட்கள் பணிபுரிந்தைமக்காக ஊதியம் வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது. மேற்படி பள்ளி ஆசிரியை அந்த 4 நாட்களுக்கான ஊதியத்தை தற்போது பெறும் பொருட்டு, 4 நாட்கள் ஊதியம் கொடுபடாதற்கு சான்று கேட்டு, மேற்படி வையம்பட்டி வட்டார கல்வி அலுவலர் லதா பேபியை சந்தித்தபோது, கொடுபடா சான்று வழங்க ரூ.1,500/- லஞ்சம் கேட்டுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக 15.12.2025ந்தேதி ஆசிரியை விமலா திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று 15.12.2025ந்தேதி துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், சேவியர்ராணி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது
வட்டார கல்வி அலுவலர் லதா பேபி லஞ்சப்பணம் ரூ.1,500/-ஐ விமலாவிடமிருந்து திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் கேட்டு பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
இது தொடர்பாக திருச்சி நகர, வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments