சென்னையில் இருந்து நெல்லை சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் கல்வீசிய நான்கு சிறுவர்களை, ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை, எழும்பூரில் இருந்து நெல்லைக்கு, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 26605) சென்றது.
விருத்தாசலம் மற்றும் தலநல்லுார் ரயில் நிலையங்களுக்கு இடையே, மணலுார் கிராமத்தில், சேலம் சாலை மேம்பாலம் அருகே, மணிமுத்தாறு ஆற்றுப் பாலத்தை ரயில் கடந்த பின், ரயில் பாதையில் நடந்து சென்ற சிறுவர்கள் குழு, ரயில் மீது கற்களை வீசி எறிந்ததில், சி5, சி6, சி7, சி17, சி18 மற்றும் இ2 ஆகிய பெட்டிகளின் கண்ணாடி ஜன்னல்கள் சேதமடைந்தன.

திருச்சி ரயில் நிலையத்தில், ரயில்வே அதிகாரிகள், உடனடியாக ஆய்வு செய்ததில், பயணியர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
திருச்சி பிரிவின் விருத்தாசலம் ரயில்வே பாதுகாப்புப் படையினர், சம்பவம் நடந்த பகுதியில் விசாரணை நடத்தி, அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த 16, 17 மற்றும் 18 வயதுடைய நான்கு சிறுவர்களை, கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிறுவர்கள் சிறார் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments