இந்நிகழ்வில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு தையல் மிஷின், ஆம்ப்ளிபையர், மற்றும் ஆடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்
ஒரு மகிழ்ச்சியான சூழலில் நாம் ஒன்றுகூடி இருக்கிறோம் .

என் சொந்தத் தொகுதி என் சொந்த வீடு இந்த திருவரம்பூர் தொகுதியில் கிறிஸ்மஸ் விழாவில் பங்கு பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
கிறிஸ்மஸ் என்பது கேக் வெட்டி ஸ்டார் கட்டுவது மட்டுமல்ல அதையும் தாண்டி அன்பை பகிர்ந்து கொள்வதுதான் கிறிஸ்துமஸ் . சிறுபான்மை மக்களுக்கு பெரும்பான்மை தருவது தமிழ்நாடு தான் என்பதை பெருமையாக சொல்கிறேன்.

கலைஞர் நல வாரியம் உருவாக்கியத்தில் இருந்து பொருளாதாரம் மேம்பாட்டுக்காக கழகம் உருவாக்கியதில் இருந்து கிறிஸ்தவ மக்கள் ஜெருசலம் செல்ல வேண்டும் என்றால் அதற்கான அதற்கான ஊக்கத்தொகை வழங்கியதில் இருந்து இது எல்லாம் உயர்த்தி வழங்கியதில் இருந்து உயர்த்தி வழங்குவதில் முத்துவேல் கருணாநிதி சிறுபான்மையினரின் அன்பின் வெளிப்பாடு காண முடிகிறது.
பெற்றோர்களை மதிக்க வேண்டும் என்ற என்னத்தை உருவாக்கியுள்ளார் ஆகவே நாங்கள் பெற்றோரையும் ஆசிரியரையும் மதிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்வோம்.

இயேசு கிறிஸ்து நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த வீரர்கள் என்பதை விட ஒரு புரட்சியாளர் பிறந்திருக்கிறார் என்பதுதான் சரியாக இருக்கும்.
பொருளை இட்ட கூடிய காலத்தில் நம் வாழ்ந்தாலும் மனிதநேயத்தை பெருக வேண்டுமென்று ஏசுநாதர் கூறினார் என்பது நான் சொல்வேன்.
உலகத்தில் 200 கோடி பேர் கொண்டாடுகிற ஒரு விழா கிறிஸ்துமஸ் . கிறிஸ்மஸ் விழா என்பது கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல நம்பிக்கை உள்ளவர்கள் யாராயிருந்தாலும் சரி அப்படி கொண்டாடுபவர்கள் தன் சுயநலத்திற்காக தான் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கவே மாட்டார்கள்.

கல்வி அறிவு என்பது இந்தச் சாதி இந்த மதம் என இல்லாமல் அனைவரையும் சென்றடைகிறது என்று சொன்னால் அதற்கு திறவுகோலா இருந்தது கிறிஸ்தவ மக்கள்தான் என பெருமையோடு சொல்வேன்.
பலர் தென்பகுதியில் மட்டும் அப்படி இருக்கிறது என்று கூறுவார்கள். அதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் இந்தியா முழுவதையும் கல்வியை கொண்டு சென்றவர்கள் கிறிஸ்தவர்கள் தான் இது சாதாரண பணியல்ல.
போட்டி போட்டுக் கொண்டு கல்வி அறிவை கொண்டு சென்ற காரணத்தினால்

பெரியார் அண்ணா கலைஞர் இவர்களின் கனவாக இருந்தாலும் சரி தமிழக முதல்வராக இருந்தாலும் சரி எல்லாரும் பகுத்தறிந்து பார்க்க வேண்டும். அன்பில் மகேஷ் ஒன்று சொல்கிறார் என்று நீங்கள் உண்மைதானா என்று சொந்த அறிவை பயன்படுத்தி சிந்தித்து செயல்படு என்ற சூழ்நிலை இயக்கம் திராவிட இயக்கம் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருவெறும்பூர் தாலுகா தலைவர் ரெவெரென்ட் ஜான் பீட்டர், SPC செயலாளர் ரெவெரென்ட் ஜெபதாஸ் மற்றும் பல்வேறு சபைகளை சேர்ந்த போதார்கள் விசுவாசிகள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments