தமிழ்நாடு மின் பகிர்மான கழக தலைமையகத்தில் நடப்பு ஆண்டிற்கான விரைவு தட்கல் திட்டத்தின் கீழ் விவசாய விண்ணப்பம் பதிவு செய்ய கடந்த 15.12.2025 அன்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வகையில் தட்கல் முறையில் ஏற்கனவே மற்றும் தற்போது பதிவு செய்த விவசாயிகளுக்கும் மின் பளுவின் தேவைக்கேற்ப விண்ணப்பதாரர்கள் மின் இணைப்பு பெற்று கொள்ளலாம்.
இதற்காக 5 HP வரை மின் பளு பயன்படுத்துவோர் ரூ.2 % இலட்சமும், 5 HP மேல் 7.5 HP வரை பயன்படுத்துவோர் ரூ.2 % இலட்சமும், 7.5 HP மேல் 10 HP வரை பயன்படுத்துவோர் 3 இலட்சமும், 10 HP மேல் 15 HP வரை பயன்படுத்துவோர் 4 இலட்சமும் திட்ட தொகை செலுத்தவேண்டும்.
ஏற்கனவே மின் இணைப்பு கோரி பதிவு செய்த விவசாயிகள் தட்கல் திட்டத்தில் விவசாய மின் இணைப்பை பெற சம்மந்தப்பட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தினை உடனே தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் தெரிவித்து கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments