Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

வழிப்பறி, போக்சோ வழக்குகள்: இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், புலிவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட T.மேட்டூர் பகுதியை சேர்ந்த சரவணன் (32), (ஓட்டுநர்) த.பெ. தனபால் என்பவர் கடந்த 28.11.2025 அன்று சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை செல்வதற்காக கரட்டாம்பட்டியிலிருந்து கிளம்பி சத்திரப்பட்டி மாடுகாட்டுக்குளம் பிரிவு ரோட்டில் காலை 08:00 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென காட்டுப்பகுதியில் இருந்து வந்த சிவராஜ் (23), (HS No. 22/25), த.பெ ரவி, அம்பலகார தெரு, பெரியகாட்டுக்குளம், முசிறி வட்டம் என்பவர் சரவணனிடம் கத்தியை காட்டி மிரட்டி மேல் சட்டை பையில் வைத்திருந்த 1200/- பணத்தை எடுத்து கொண்டதாகவும், பிறகு சத்தம் போடவே தூரத்தில் இருந்த நபர் வருவதை பார்த்த உடனே அங்கிருந்து ஓடிவிட்டதாகவும், மேற்படி நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பாதிக்கப்பட்ட சரவணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் புலிவலம் கா.நி. குற்ற எண்.431/25, ச/பி.309(4), 311 BNS – ன் படி 28.11.25 வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் எதிரி அன்றே கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 06 வயது நிரம்பிய சிறுமி கடந்த 15.11.2025 அன்று மாலை 3:00 மணிக்கு தனது கடையின் அருகே விளையாடி கொண்டிருந்த போது அவ்வழியே வந்த விக்னேஸ்வரன் 26/25, (HS No. 05/25), த.பெ திருநாவுக்கரசு,பெரிய செட்டி தெரு என்பவர் அச்சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி கொடுத்த புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய குற்ற எண். 62/25, U/s 5(m) 5(I)r/w 6(1) of POCSO Act & 3(1)(W)(i)(ii)(va) of SC/ST ACT ன் படி 16.11.25 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் எதிரி 21.11.2025 கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மேற்படி சிறையில் இருந்து வரும் எதிரிகள் சிவராஜ் (23), (HS No.22/25), த.பெ ரவி, அம்பலகார தெரு, பெரியகாட்டுக்குளம், முசிறி வட்டம், திருச்சி மாவட்டம், விக்னேஸ்வரன் 26/25, (மெக்கானிக்), (HS no. 05/25), த.பெ திருநாவுக்கரசு, பெரிய செட்டிதெரு, லால்குடி தாலுகா, திருச்சி மாவட்டம் என்பவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று 17.12.2025-ம் தேதி திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை
தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 115 தடுப்பு காவல்
ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளுக்கு சார்வு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *