ஸ்ரீரங்கம் பகுதி, கொள்ளிடக்கரையில் உள்ள, யாத்திரிகர் நிவாஸில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த, சுமார் 67 வயதுடைய தில்லைநாதன் மகன் சாமிநாதன் என்பவர், தனது மூன்று குடும்ப உறுப்பினர்களான மனைவி செண்பகவல்லி மகள்கள் சுமார் 42 வயதுடைய பவானி மற்றும் சுமார் 37 வயதுடைய ஜீவா ஆகியோர் கடந்த 10.12.2025ம் தேதி அறை எண் 710 இல் தங்கியிருந்த நிலையில் இன்று (19.12.25) வெள்ளிக்கிழமை காலை, மேற்படி அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து கதவை உடைத்து பார்த்ததில், மேற்படி குடும்பத்தை சேர்ந்த 4 நபர்களும், அழுகிய நிலையில் இறந்து கிடந்தனர்.
கடிதம் ஒன்றை சுவாமிநாதன் எழுதி வைத்துள்ளார் அதில் தனது இரண்டு மகள்களும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்குப் பிறகு அவர்களை பார்ப்பதற்கு யாரும் இல்லை ஆகவே தாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர் மேலும் அவர்களது உறவினர்கள் கைபேசி எண்களும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments