அன்புக்கும், தொன்டுக்கும், வீரத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் கலியுக கடவுளான ஸ்ரீராமபக்தன் அனுமனை கலியபுகக்கடவுளாக போற்றப்படுகிறார்.
அனுமன் மார்கழி மாதம் அமாவாசையன்று மூலம் நட்சத்திரத்தில் அவதரித்த தினமான இன்று அனுமன் ஜெயந்தி விழா நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் மிகவும் விமரிசையாக
கொன்டாடப்பட்டு வருகிறது.
அனுமன் ஜெயந்தியான இன்று விரதமிருந்து ராமநாமம் ஜெபித்து அனுமனை வழிபடுபவர்களுக்கு சஞ்சலங்கள் விலகி, சகலசெல்வங்களும் பொங்கி பெருகும் என்பதும், சனிப்பெயர்ச்சி நடப்பவர்கள் அனுமனை வணங்கி வந்தால் சகலசங்கடங்களும் நீங்கும்
என்பதும் ஐதீகம்.
அனுமன் ஜெயந்தியையொட்டி திருச்சியில் பிரசித்திபெற்ற கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஆலயத்தில் முலவர் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெற்று தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
வேறு எங்கும் இல்லாத வகையில் இவ்வாலயத்தில் உற்சவர் ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.
பின்னர் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைமாலை மற்றும் 10,008 ஜாங்கிரி மாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
மூலவர் தங்க கவச அலங்காரத்திலும், உற்சவர் வெள்ளிக்கவசம் அணிந்தும் ஒரு லட்சத்து எட்டு வடை மாலையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதனைத்தொடர்ந்து வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க லட்சார்த்தனையும், ராமபாராயணமும் நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள்
நீண்ட வரிசையில் நின்று அனுமனை தரிசித்து வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments