பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (BAI) திருச்சிராப்பள்ளி மையம் சார்பில் “பில்ட் ராக் 2025” என்ற கட்டிடத் துறை கண்காட்சி, டிசம்பர் 26, 27, 28 ஆகிய தேதிகளில் கலைஞர் அறிவாலயம் திருச்சியில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இந்நிகழ்ச்சிக்கு அ. நசுருதீன் – தலைவர், கே. குமரன் – பில்ட் ராக் 2025 தலைவர், ஏ. ஜியோர் ராய் – இணைத் தலைவர்,
ஜெ. ஜெயராமன் – செயலாளர், எர். பி.ஏ. விஸ்வநாத் – பொருளாளர் ஆகியோர் தலைமை பொறுப்பில் உள்ளனர்.
மேலும் ஆலோசகர்களாக ஆர். சரவணன், ஆர். சுப்பிரமணி, ஜெயந்த் குமார் எம். மேத்தா உள்ளிட்டோரும், ஒருங்கிணைப்பாளர்களாக எர். பி. முருகானந்தம், பி.கிரி பிரசாத், டி. ராமநாதன், ஜி. அறிவழகன், எஸ்.ஆர். ஸ்ரீதர், ஜி. அசோக் குமார் ஆகியோரும் செயல்பட்டு வருகின்றனர்.
கட்டிடத் துறையில் புதிய தொழில்நுட்பங்கள், பொருட்கள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments