அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 38-வது ஆண்டு நினைவு நாள் வரும் 24.12.2025 அன்று கடைபிடிக்கப்பட உள்ளது.

கழகப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளை எழுச்சியுடன் அனுசரிக்க கழகத்தினர் தயாராகி வருகின்றனர்.
குறிப்பாக, அன்று காலை 9 மணி அளவில் BHEL வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருஉருவச் சிலைக்கு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட உள்ளது.

இந்த நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நினைவு நாளையொட்டி, தத்தமது பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலைகளுக்கும், திருவுருவப் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி அஞ்சலி செலுத்த வேண்டும் என கழக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில், எடப்பாடியார் அவர்களின் தலைமையின் கீழ் இந்த நினைவு நாள் நிகழ்வுகள் தமிழகம் எங்கும் உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற உள்ளன.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments