திருச்சி அண்ணாசிலை அருகேயுள்ள பூசாரி தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான அக்பர்கான் என்பவரது மனைவி பாத்திமா அண்ணாசிலை அருகே சூப் கடை வைத்து நடத்திவருகிறார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தள்ளுவண்டி கடை கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை விண்ணப்பித்திருந்த நிலையில், குறைதீர்க்கும் முகாம் நாளில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு மனு அளிக்க வந்தபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்போல வந்த நபர் பாத்திமா மற்றும் அக்பர்கானிடம் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தால் தள்ளுவண்டி வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு ஆட்சியில் அலுவலகத்திற்குள் உள்ளே சென்றுவிட்டு,
திரும்பி வராத நிலையில் தான் ஏமாற்றப்பட்டது அறிந்த தம்பதியினர் இருவரும் ஆட்சியரிடமும் அதே நேரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர்.
மோசடி டிப்டாப் ஆசாமியை ஒன்றரை மாதமாக தேடிவந்த நிலையில் இன்று ஜங்ஷன் பகுதியில் நின்று கொண்டிருந்த மோசடி ஆசாமியை கணவன் மனைவி இருவரும் பொதுமக்கள் உதவியுடன் துரத்தி பிடித்தனர். பிறகு அவரை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் ஒப்படைக்க ஆட்டோவில் கை கால்களை கட்டி அழைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் விசாரித்ததில் மோசடி டிப்டாப் ஆசாமியின் பெயர் மணி (45), பிரம்மதீர்த்தசாலை, கரூரைச் சேர்ந்தவர் என்பதும், தாலுக்கா அலுவலகத்தில் பணியாற்றி வேலையை விட்டு நின்றதும், இதுபோன்று செயல்களில் அரங்கேற்றி வந்ததும் தெரிய வந்தததையடுத்து அவரை கைது செய்து போலீசார் அழைத்துச்சென்றனர். மோசடி நபரை போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளியை பாதிக்கப்பட்டவர்களே ஆட்டோவில் கட்டி இழுத்து வந்த சம்பவம் வெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் இவர் ஏராளமானவரிடம் ஏமாற்றி உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது வெள்ளை நிற உடைகள் கழுத்தில் தமிழ்நாடு அரசு அடையாள அடையாள அட்டை தொங்கவிடும் ரோப் மட்டும் வைத்து ஏராளமான உரை ஏமாற்றி வந்தது தெரிய வந்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments