திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் இருந்த ஆயதப்படை காவலர்
பாதுகாப்பு பணிக்காக மது போதையில் வந்த ஆயுதப்படை காவலரால் சக காவலர்கள் அதிர்ச்சி
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றி அதன் நோக்கத்தை சிதைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் தலைமை கண்டண ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்காக வந்த சதிஷ் என்கிற காவலர் மது போதையில் தள்ளாடிக் கொண்டு இருந்தார். அது அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனை பார்த்த சக போலீசார் அவரை அழைத்துக் கொண்டு சென்று அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தினர்.
பாதுகாப்பு பணிக்காக வந்த காவலர் மது போதையில் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments