திருச்சி மாநகரம், அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மேல அம்பிகாபுரம், அண்ணாநகரைச் சேர்ந்த பெரியசாமி மகன் லோகநாதன் (27) என்பவர் கடந்த 14.03.2021-ஆம் தேதி இரவு அரியமங்கலம் காவல்நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரில்,

தான் தனது அண்ணன் தங்கமணி மற்றும் சிலம்பரசன் (36), அவரது மனைவி ரேஸ்மா, தனது அம்மா பார்வதி, பெரியம்மா ஜானகி ஆகியோருடன் வசித்து வருவதாகவும், தனது குடும்பத்திற்கும், தனது சித்தப்பா சேகர் குடும்பத்திற்கும் பகை இருந்து வருவதாகவும், தொழில் ரீதியாகவும் பகை இருந்ததாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 14.03.2021 அன்று இரவு 11.00 மணியளவில் தனது அண்ணன் சிலம்பரசன் செல்போனில் பேசிக்கொண்டே வீட்டிற்கு வெளியே சென்ற போது, தனது அண்ணன் சிலம்பரசனை மர்ம நபர்கள் சிலர் வெட்டி கொலை செய்து விட்டார்கள் என்றும், அவரை கொலை செய்தவர்களை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின் பேரில் அரியமங்கலம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

முன்பகை காரணமாக நடைபெற்ற இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு 1 ) அரியமங்கலம், திடீர் நகர், முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துக்குமார், (25), 2 ) லால்குடி, புள்ளம்பாடி, அண்ணாநகரைச் சேர்ந்த ரமேஷ் (எ) மகேஸ்வரன் (22), 3) லால்குடி, புள்ளம்பாடி, தேரோடும் வீதியைச் சேர்ந்த ராஜேஷ் (எ) ராஜேஷ் குமார் ஆகிய 3 பேர் உள்ளிட்ட 13 எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரி முத்துக்குமார் என்பவர் ஒரு கொலை வழக்கு உட்பட இரு வழக்குகளில் சம்மந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்ததாலும், மேலும், எதிரிகள் ரமேஷ் (எ) மகேஸ்வரன் மற்றும் ராஜேஷ் (எ) ராஜேஷ் குமார் ஆகிய மூவரும் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவருவதாலும், அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டும்,

அரியமங்கலம் காவல்நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் ஆணையின் படி மேற்படி 1) முத்துக்குமார், 2) ரமேஷ் (எ) மகேஸ்வரன் மற்றும் 3) ராஜேஷ் (எ) ராஜேஷ் குமார் ஆகிய மூவருக்கும் இன்று 02.06.2021-ம் தேதி குண்டர் தடுப்பு காவல் ஆணை சார்வு செய்யப்பட்டு அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC

 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           7
7                           
 
 
 
 
 
 
 
 

 03 June, 2021
 03 June, 2021





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments