2026-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31.12.2025-ம் தேதி இரவு 9 மணிமுதல் வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், உணவகங்கள் உட்பட பல்வேறு பொது மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவும், குற்றத் தடுப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், வாகனச் சோதனை பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அமைதியான மற்றும் அசம்பாவிதங்கள் இல்லாத புத்தாண்டு கொண்டாட்டத்தை உறுதி செய்வதற்காக, திருச்சி மாநகரில் சுமார் 500 காவல்துறையினரை பணியமர்த்தி விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, அவர்களால் தெரிவித்து கொள்ளப்படுகிறது.
திருச்சி மாநகரில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக, காவல் துணை ஆணையர்கள், காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் உட்பட மொத்தம் சுமார் 500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
டிசம்பர் 31, புதன்கிழமை இரவு 9 மணி முதல், திருச்சி மாநகர காவல்துறை முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த உள்ளது. இருசக்கர வாகனங்களில் ஊர்வலம் செல்லவும், பட்டாசு வெடிப்பதற்கும், பைக் சாகங்கள் (Wheeling) நிகழ்த்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் சாலைகளில் ஒளிரும் தடுப்புகள் வைக்கப்பட்டு, 18 இடங்களில் தீவிர வாகன சோதனை செய்யபட உள்ளது.
இளைஞர்கள் பைக் சாகங்கள் (Wheeling) மற்றும் பைக் பந்தயங்களைத் (Bike Race) தடுக்கும் பொருட்டு, டிராபிக் மார்ஷல் (Traffic Marshal) வாகனங்களை கொண்டு கண்காணிக்கவும், திருச்சி மாநகரில் 60 இடங்களில் பிக்கெட் பாயிண்ட் அமைத்தும், மாநகரில் உள்ள 9 சோதனை சாவடிகள் மற்றும் காவல் நிலைய 14 மாநகர ரோந்து வாகனங்களில் (Red Patrol) போதிய காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். மேலும் மாநகரில் உள்ள தேவாலயங்கள், முக்கிய கோயில்கள் மற்றும் பிற வழிபாட்டுத்தலங்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொது இடங்களுக்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக மாநகரில் PINK Patrol வாகனங்கள் மூலம் கண்காணிக்கவும், மக்கள் கூட்டம் நிறைந்த மற்றும்
அதிக போக்குவரத்து உள்ள பகுதிகளில் ஒலிபெருக்கி அமைப்புகள் மற்றும் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தி, நடமாடும் கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்படும்.
மேலும் பொது இடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடிப்பது மற்றும் ஹோட்டல்களில் இரவு நேர நடன நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்துவதற்கும், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கும், காவல்துறை மற்றும் பிற தொடர்புடைய துறைகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். விதிகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், அதிவேகமாகச் வாகனத்தில் செல்லுதல், கவனக்குறைவாகவும் அபாயகரமாகவும் வாகனம் ஓட்டுதல், மூன்று பேர் பயணம் செய்தல், பாதுகாப்பு ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஒலி மாசு ஏற்படுத்துதல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது திருச்சி மாநகர காவல்துறையினரால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, அவர்கள் தெரிவித்தார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments