பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருச்சி மன்னார்புரம் ராணுவம் மைதானத்தில் வருகிற 5ம் தேதி நடைபெற உள்ள 2000 பேர் பங்கேற்று பொங்கல் வைக்கும் நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளார். இதற்கான முகூர்த்தக்கால் நடும் வைபவம் இன்று மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து முன்னிலையில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கருப்பு முருகானந்தம் கூறுகையில்… நயினார் நாகேந்திரன் அவர்கள் தமிழகம்முழுவதும் திமுக ஆட்சியை அகற்றவேண்டும் என்பதற்காக, பல்வேறு காரணங்களால் தலைகுனிந்துள்ள தமிழகத்தை, தலைநிமித்த வேண்டும் என்பதற்காக பயணத்தை துவங்கி 52மாவட்டங்களில் பயணத்தை நிறைவுசெய்துள்ளோம். 54ஆவது மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மாலை 4 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் நிறைவுவிழா பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளவேண்டும் என முயற்சித்துள்ளோம்.
உள்துறை அமைச்சரின் பயணம் தமிழகத்தில் நடைபெறுகிறது என்றாலே ஒரு மிகப்பெரிய அரசியல் எதிர்பார்ப்பு நாடுமுழுவதும் பற்றிக்கொள்வது எதிர்பார்ப்பு உண்டு, அதேபோன்று தற்போது அமித்ஷாவின் வருகை திமுகவின் ஆட்சி தமிழகத்தில் அகற்றப்படும் என்ற உத்தரவாதத்தை கொடுக்கக்கூடியவகையில் இந்தபயணம் அமையவேண்டும் என்றுவிரும்புகிறோம்.
அந்த நிறைவு நிகழ்ச்சிக்குபிறகு மறுநாள்காலை பாஜகவின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற மன்னார்புரம் ராணுவமைதானத்தில் தமிழகத்தின் கலாச்சாரமாக இருக்கக்கூடிய பொங்கல் விழாவை 2000 பொங்கல் பானையில் பொங்கல்வைத்து கொண்டாடும் நிகழ்வு நடைபெறஉள்ளது, அதற்கான முகூர்த்த கால் நடும் வைபவம் தற்போது நடந்துள்ளது என்றார்.
மேலும், நிச்சயமாக உள்துறை அமைச்சரின் பயணம் 5ம் தேதி மற்றும் 5ம் தேதி பயணம் தமிழகத்தில் திமுகவின் ஆட்சி வீழ்த்தப்பட்டு தேசியஜனநாயகக் கூட்டணி அமையும் என்ற உத்தரவாதத்தை அளிக்கக்கூடிய பயணமாகஅமையும். 5ம் தேதி உயர்மட்டகுழு மற்றும் மையக் குழுவை சந்திப்பதற்கான நிகழ்ச்சி உள்ளது, தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்து கேட்டறிந்து அவரது வழிகாட்டுதல்களை அளிக்கஉள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெறும் பாஜக இறுதிகட்ட பிரச்சாரத்தில் கூட்டணிகட்சி தலைவர்கள் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கமாட்டார் அன்றையதினம் சேலத்தில் சுற்றுப்பயணம் இருப்பதால் தேதி மாற்றமுடியாது, இது பாஜகவின் நிகழ்ச்சியாகவே இருக்கும். அதன்பிறகு யாத்திரை நிறைவுபெறாத மாவட்டங்களில் பொதுக்கூட்டங்களாக நடத்துவது என திட்டமிட்டுள்ளதாகவும், அதேநேரம் எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணம் நிறைவு பெற்ற பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் மிகப்பெரிய அளவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடமாட்டோம் என்ற சொல்லக்கூடிய பாஜகவை பார்த்துதான் திமுகவில் உள்ள அனைவருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது பாஜக என்ன செய்யப் போகிறது, என்ன திட்டத்தை வகுக்கபோகிறது என்ற எண்ணத்தில் முதல்வருக்கு தூக்கம் இல்லாமல் இருப்பதுடன், மீண்டும் ஆட்சிக்கு வருவோமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோரது சுற்றுப்பயணம் தற்போதைய திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பாஜக ஒரு மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என எண்ணினால் அரசியல் வியூகம்அமைப்பதில் பாஜகவுக்கு ஈடுஇணை இல்லை, பீகாரில் மற்றும் மாவட்டங்களில் ஏற்பட்ட சூழ்நிலையை தேசிய ஜனநாயக கூட்டணி பெறும், திமுகவை இந்ததேர்தலில் வீழ்த்துவோம். அதன்பிறகு திமுக இல்லாத நிலையை தமிழகத்தில் ஏற்படுத்துவோம், திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்குவேண்டும் என்றும் அதிக சீட்டு கேட்கும் பிரச்சனை திமுகவில்தான் நிலவுகிறது,
எங்களது கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை பொங்கலுக்குபிறகு பாஜக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணையக்கூடியசூழல்உள்ளது, நிச்சயம் மிகப்பெரிய கூட்டணியாக மற்றும் ஆட்சியமைக்ககூடிய கூட்டணியாக அமையும். ஒரு பிரச்சனைக்கு மாற்றாக புதிய பிரச்சினையை கிளப்புவது தான் திமுகவின் வேலை தினசரி நிகழக்கூடிய நிகழ்வுகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் நிச்சயம் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments