திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் 125ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
டிசம்பர் 14ஆம் தேதி முகூர்த்த கால் நடுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து டிசம்பர் 25ஆம் தேதி இரவு கம்பம் நடப்பட்டு கரகம் பாலிக்கப்பட்டது.
பகவதி அம்மன் திருக்கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது
விழாவின் முக்கிய நிகழ்வான எட்டாம் நாள் ரூபாய்நோட்டு மற்றும் நாணயங்களால் ஆன “தனலட்சுமி அலங்காரம்” நடைபெற்றது .
ரூ.1, ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 நோட்டுகளால் மற்றும் நாணயங்களால் நேர்த்தியாக
அலங்காரம் செய்யப்பட்டும், தோரணமாகவும் வடிவமைக்கப்பட்டு,
தேவஸ்தான அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து பொங்கல் படையலிட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அபிஷேக மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது.
தனலட்சுமி அலங்காரத்தில் பகவதி அம்மன் காட்சியளிப்பதால்
திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments