திமுக மூத்த தலைவரும் முன்னாள் எம்.பியுமான எல். கணேசன்(92) காலமானார்.
திமுகவின் மிக மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த எல். கணேசன், ‘மொழிப்போர் தளபதி’ என அழைக்கப்பட்டவர்.
திமுக உயர்நிலைத் திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்த அவர், ஒரத்தநாடு தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2004-ல் திருச்சி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியாக தேர்வானார்.
மேலும், 1980-ல் மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
வைகோ மதிமுகவை தொடங்கியபோது திமுகவில் இருந்து விலகி மதிமுகவிற்கு சென்ற எல். கணேசன், சில ஆண்டுகளில் மீண்டும் திமுகவிற்கே திரும்பினார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments