திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு
உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும், 14.01.2026 (புதன்கிழமை) அன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெறவுள்ளதையொட்டி,
அனைத்து பொதுமக்கள், விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் அனைவரும் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்து தருமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளானது, இயற்கைக்கும் உழைப்பிற்கும் நன்றி கூறும் திருநாளாகவும், சமூக வேறுபாடுகளை மறந்து, “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற உயரிய தமிழர் சிந்தனையை நடைமுறையில் வெளிப்படுத்தும் நாளாகவும் விளங்குகிறது,
இந்த ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 14.01.2026 அன்று பாரம்பரிய முறையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெறுவதையொட்டி, அனைத்து கிராம பொதுமக்கள், விவசாயிகள்,
கூலித்தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தவறாது சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்து தருமாறும்,
மேலும், சமத்துவ பொங்கல் விழா நடைபெறும் நாளன்று மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களுக்கு கோலப்போட்டி நடைபெறவிருப்பதால், சுய உதவிக்குழுவில் உள்ள அனைத்து பெண்களும் கோலப்போட்டியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments