திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே.பாலகிஷ்ணன், அவர்களின் உத்தரவின்படி கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் பொருட்டு 09.01.2026-ந் தேதி இரவு நாகப்பட்டினம் மாவட்டம் வேட்டைகாரன்யிருப்பு தபால் நிலையம் அருகில் மேற்கொள்ளப்பட்ட வாகனத்தணிக்கையில் கார்த்திகேயன்,
தலைமை காவலர் மற்றும் தியாகேஷ் இரண்டாம்நிலை காவலர், சிறப்பு காவல்படை காவலர் ஆகிய இருவரும் வாகன தணிக்கை செய்தபோது அந்த வழியாக வந்த TN 19 R 0007 என்ற பதிவெண் கொண்ட Innova Crysta வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது வாகனத்தில் இருந்த ஒரு நபர் தப்பியோடிவிட்டார்.
மேற்படி வாகனத்தை சோதனை செய்தபோது சுமார் 220 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது. வாகனத்தில் இருந்த மற்றொரு நபரை பிடித்து விசாரிக்க தனது பெயர் மணிகண்டன் 23/26 த/பெ பூமிநாதன், ஜோசப்தெரு, மதுரை மாவட்டம் என்றும், தப்பியோடியவர் பெயர் தங்கமுத்து, த/பெ சக்திவேல், மதுரை மாவட்டம் என்றும்,
மேற்படி வாகனத்தை மதுரை மாவட்டம் 6-வது பட்டாலியனில் அவில்தாராக பணிபுரிந்து நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்ட அலிஅக்பர் த/பெ அலாவுதீன் என்பவரிடமிருந்து தங்கமுத்து என்பவர் வாடகைக்கு எடுத்துக்கொண்டு கஞ்சாவை வேதாரணியத்திற்கு கடத்தி வந்ததாகவும் தெரிவித்தார்.
மேற்படி நபர்கள் மீது வேட்டைகாரன்யிருப்பு காவல்நிலைய குற்ற எண் 10/26 U/s 8(c) r/w 20(b)(ii)(C), 25, 29 (1) NDPS Act -ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாகன தணிக்கையில் சிறப்பாக பணியாற்றி கஞ்சா கடத்தல் சம்மந்தமாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த இருகாவலர்களையும் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே.பாலகிருஷ்ணன், அவர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments