திருச்சி மாநகரில் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஆதிராஜ். இன்று(11.01.2026) மதியம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பொழுது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். கை ,கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி ஆதிராஜ் உயிரிழந்தார். ஆதிராஜ் மாநில அளவில் சிறந்த துப்பாக்கி சூடும் முதலிடத்தை தக்க வைத்திருந்தார் எஸ்.எஸ்.ஐ ஆதிராஜ். எஸ் எல் ஆர் ரக துப்பாக்கிகளை கையாண்டு இலக்கை குறிவைத்து சுடுவதில் வல்லவர்.
இவருடைய இழப்பு அவருடைய குடும்பத்திற்கு மட்டுமின்றி காவல்துறைக்கும் பேரிழப்பாக உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments