இன்று (12.01.2026) ரெயில்கள் மற்றும் ரெயில் நிலைய வளாகங்க எளிதில்தீப்பற்றக்கூடிய மற்றும் சட்டவிரோதமான பொருட்களைக் கொண்டு செல்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து, திருச்சி ரயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீஸ் சார்பாக சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் தீவிர நாசவேலை தடுப்பு சோதனை நடத்தப்பட்டது.
K. அருள் ஜோதி, IRPFS, முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், தெற்கு ரயில்வே அவர்களின் உத்தரவின் பேரில், திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் மதிப்பிற்குறிய பிரசாந்த் யாதவ் (Prashant Yadav) IRPFS மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர் (Pramod Nair), ஆகியோர்களது மேற்பார்வையில்,
திருச்சி RPF ஆய்வாளர் அஜய் குமார் (Ajay Kumar), திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு சரவணன்,(SARAVANAN, SI/BDS) உதவி ஆய்வாளர், அவர்கள் தலைமையில், இன்று 12.01.2026,திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, சப் இன்ஸ்பெக்டர் G. ரவிச்சந்திரன் & செல்வராஜ், வெடிகுண்டு தடுப்பு பிரிவு இளையராஜா, சங்கர் மற்றும் உதவி ஆய்வாளர் ரயில்வே போலீஸ் திருச்சி (SI/GRP/Trichy) இணைந்து திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர நாசவேலை தடுப்பு சோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், ரெயில்கள், பார்சல் அலுவலகங்கள் மற்றும் ரெயில்வே யார்டு பகுதி எளிதில் தீப்பற்றக்கூடியபொருட்கள் மற்றும் சட்டவிரோதப் பொருட்களைக் கொண்டு செல்வதால் ஏற்படும் விபரீத விளைவுகள்குறித்து பயணிகளுக்கு விரிவாக எடுத்து ரைக்கப்பட்டது.
மேலும் பாதுகாப்பற்ற முறையில் பொருட்களைக் கொண்டு செல்வது மற்றும் அபாயகரமான பொருட்களை ரெயிலில் ஏற்றுவது சட்டப்படி குற்றமாகும் என் பது குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர். மேலும், பொது இடங்களில் புகைப் பிடித்தல் மற்றும் புகையிளைப் பொருட்கள் தொடர் பான ‘சட்ட விதிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் பின்வரும் விழிப்புணர்வு தகவல்களை தெரிவித்தனர்,
ரயில் தண்டவாளங்களைக் கடக்காதீர்கள் — உங்கள் வாழ்க்கை விலைமதிப்பற்றது. எப்போதும் நடை மேம்பாலங்களைப் (FOB) பயன்படுத்துங்கள்.
ரயில்களின் படிக்கட்டுகளில் பயணம் செய்யாதீர்கள்.
ஓடும் ரயில்களில் ஏறுவதையோ அல்லது இறங்குவதையோ தவிர்க்கவும்.
ரயில்களுக்கு அருகில் சாகசங்களையோ அல்லது சர்க்கஸ் வித்தைகளையோ செய்ய முயற்சிக்காதீர்கள்.
ஓடும் ரயில்கள் அல்லது ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்கவும்.
ரயில்கள் மீது கல் எறியும் செயல்களில் ஈடுபடாதீர்கள்.
ரயில் தண்டவாளங்களில் கற்களையோ அல்லது வேறு எந்தப் பொருட்களையோ வைக்காதீர்கள், ஏனெனில் இது ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
பயணிகளின் உடைமைகள் திருட்டுக்கு எதிரான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
ரயில்கள் நிற்கும் போது, தூங்கும்போதோ அல்லது கழிவறைக்குச் செல்லும்போதோ, சார்ஜிங் பாயிண்டுகளில் மொபைல் போன்களை விட்டுச் செல்ல வேண்டாம்.
இரவு நேரங்களில், அதிகமான நகைகளை அணிந்திருக்கும்போது ஜன்னல்களுக்கு அருகில் உட்காருவதைத் தவிர்க்கவும் மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்யவும். வழங்கப்பட்ட வளையங்களைப் பயன்படுத்தி, சூட்கேஸ்கள் மற்றும் உடைமைகளைச் சங்கிலிகளால் பூட்டிப் பாதுகாக்கவும்.
பெண் பயணிகள் தனியாகப் பயணம் செய்ய வேண்டாம் என்றும், பெண்கள் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள அருகிலுள்ள பெட்டிகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டனர்.
ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், உடனடியாக ரயில்வே உதவி எண் 139-ஐப் பயன்படுத்தவும்.
இந்த பாதுகாப்புத் தகவல்கள் அனைத்தும் திருச்சி ரெயில் நிலையத்தில் உள்ள பொது ஒலிபரப்பு அமைப்புமூலம் தொடர்ச்சியாக அறிவிக்கப் பயணிகளின் கவனத்திருகு, பயணிகள் தங்கள் பயணத்தின் போது வெடி பொருட்கள், பெட்ரோல், சமையல் எரிவாயு உருளை கள் போன்ற ஆபத்தான பொருட்களைத் தவிர்த்து, பாதுகாப்பான ரெயில் பயணத்தை உறுதிசெய்யவேண் டும் என ரெயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சோதனையின் போது, ரயில்வே வளாகத்திலும் ரயிலிலும் சந்தேகத்திற்கிடமான, குற்றஞ்சாட்டக்கூடிய, வெடிக்கும் பொருட்கள் & எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை .
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments