தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் மளிகை கடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கக் கூடிய அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மாநகராட்சி சார்பில் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை தள்ளுவண்டி, சரக்கு வாகனத்திலும் வீதி வீதியாக விற்கப்படுகிறது. இதனால் சந்தையில் சென்று வாங்கும் விலையை விட இரண்டு மடங்கு விலை விற்பனை செய்யப்படுகிறது.

இதன் காரணமாக காய்கறி விற்பனையாளர்கள் நிர்ணயம் செய்வது தான் விலை என்றாகி விட்டது. இதற்கிடையில் இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் கள்ளத்தனமாக இறைச்சி அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மேலும் முட்டையை தற்போது பொதுமக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர்.
 தற்பொழுது முழு ஊரடங்கு எதிரொலி காரணமாக முட்டை விற்பனை அதிகளவில் இருப்பதால் பிராய்லர் கோழி முட்டை விலையை உயர்த்தி விட்டனர்.  ரூபாய் 4.50 என விற்கப்பட்ட ஒரு முட்டை தற்போது 6 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோன்று நாட்டுக்கோழி முட்டை விலை ரூபாய் 10 மற்றும் 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு முட்டை தற்பொழுது 20 முதல் 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC




            
            
            
            
            
            
            
            
            
            


Comments