திருச்சி உழவர் சந்தையில் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடி வந்தனர் தற்போது இஸ்லாமிய பெண் ஒருவர் பொங்கல் வைக்கும் பொழுது திடீரென தீப்பிடித்து கால்களில் தீ காயம் ஏற்ப்பட்டு அலறினார். உடனே அருகில் இருந்த கார் மூலம் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாநகராட்சி சார்பில் நடைபெறும் இந்த சமத்துவ விழாவில்.
ஆம்புலன்ஸ் வசதி மருத்துவ வசதி எந்தவித ஏற்பாடுகளும் செய்யாமல் மாநகராட்சியின் அலட்சிய போக்குடன் இருந்துள்ளது.
இவ்விழாவை எம்.பி அருண் நேரு, ஆட்சியர் சரவணண், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆகியோர் பார்வையிட்டு துவக்கி வைத்தனர்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தால் பொங்கல் வைத்து கொண்டாடியவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments