தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை நாளையும், அதனைத் தொடர்ந்து உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்யும் உழவர் திருநாள் மற்றும் மாட்டுப் பொங்கல் திருநாள் தொடர்ந்து கொண்டாடப்பட உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ஆதவத்தூர், வயலூர், சோமரசம்பேட்டை, அந்தநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மல்லிகைப்பூ சாகுபடி செய்யப்பட்டு திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கும், ஸ்ரீரங்கம் பூச்சந்தைக்கும் பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

இதனுடைய கடந்த சிலநாட்களாக திருச்சி மாவட்டத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவு மற்றும் அவ்வப்போது பெய்துவரும் மழையின்காரணமாக மல்லிகைப்பூ விளைச்சல் குறைவாக உள்ளது.
அதேநேரம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், தொடர்மழை மற்றும் பனியின் காரணமாக திருச்சி காந்திசந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்ததால் திருச்சி காந்திசந்தை பூமார்க்கெட்டில் பூக்கள்விலை பலமடங்கு உயர்ந்தது.

கடந்த வாரங்களில் ஒரு கிலோ 600 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ இன்று பல மடங்கு உயர்ந்து 1கிலோ மல்லிகை – 5000, முல்லை – 2300, கனகாம்பரம் – 1800, ஜாதிமல்லி மற்றும் காக்கரட்டான் – 1500 ரூபாய்க்கும், செவ்வந்தி – 120, பன்னீர் ரோஸ் மற்றும் சம்பங்கி 150 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தலைக்கு வைக்கும் பூக்கள் விலை அதிகரித்து இருந்ததால் சாமி படத்திற்கு மட்டும் பூக்களை பெருமளவு வாங்கிச் செல்லும் பொதுமக்கள் தலைக்கு பூ வைக்க கூட பூக்கள் வாங்கிச் செல்ல முடியாத நிலை உள்ளதாக இல்லத்தரசிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments