திருச்சி | 15 ஜனவரி 2026
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில், இன்று (15/01/2026) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விசேஷ வழிபாடுகள் மற்றும் புறப்பாடு நடைபெற்றது.

இன்று காலை, கோயிலின் உற்சவரான நம்பெருமாள், உபய நாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் (பல்லக்கு) எழுந்தருளி புறப்பட்டார். இந்த விசேஷ புறப்பாட்டின் போது, நம்பெருமாள் அழகிய கிளி மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

புறப்பாட்டின் ஒரு பகுதியாக நம்பெருமாள், உபய நாச்சியார்களுடன் கோயிலில் உள்ள சங்கராந்தி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
இந்த வைபவத்தைக் காணத் திரளான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments