தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக,
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள எஸ்ஆர்எம் குழுமத்தின் பாவேந்தர் பாரதிதாசன்கல்லூரியில் பொங்கல் விழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு எஸ்.ஆர்.எம். குழும தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து அவர்களின் வழிகாட்டுதலின் படி, கல்வி இயக்குனர் வெங்கடேஷ் பாபு, இயக்குனர் சிதம்பரராஜன், முதல்வர் சரவணன், தலைமை நிர்வாக அலுவலர் D.R.வெங்கடேசன், ஆகியோர் தலைமை வகித்தனர்.
விழாவில் மாணவ மாணவிகள் சேலை வேஷ்டி புத்தாடை உடுத்தி கரும்பு மற்றும் தென்னை ஓலைகளால் வளாகத்தை அலங்கரித்தும், ஜல்லிகட்டு காளைகளுடன் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்தனர்.

மேலும் நாட்டு புற ஆட்டங்களான தாப்பாட்டம் பொய்கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம், ஆகியவை இடம் பெற்றன.
மேலும் மாணவ மாணவிகளுக்கு கோலப்போட்டி, சாக்கு போட்டு பானை உடைத்தல் போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
இதில் ஆர்வமுடன் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.

மேலும் இந்த பொங்கல் விழாவில் மாணவ மாணவிகள் உற்சாக நடனமாடி சிறப்பாக கொண்டாடினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments