பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்து முன்னோர்களின் ஆசியைப் பெறும் நாளான தை அமாவாசை தினமான இன்று குலதெய்வ வழிபாடு செய்யலாம். அன்றையதினத்தில் அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

இதனிடையே திருச்சி உறையூர் சாலைரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ குங்குமவல்லி சமேத அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் உள்ள தில்லைகாளி சன்னதியில் வரமிளகாய் யாகம் நடைபெற்றது.
விக்னேஸ்வர பூஜையை தொடர்ந்து வரமிளகாய் மற்றும் பல்வேறு ஹோமபொருட்களை யாககுண்டத்தில் இட்டு மகா வரமிளகாய் யாகம் நடைபெற்றது.

இந்த வழிப்பாட்டில் பங்கேற்றால், அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும், செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் நீங்கி நிம்மதி தரும்.
கடன் தொல்லை நீங்கும். முன்னோர் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். எனவே பெருந்திரளான பக்தர்கள் வரமிளகாய் யாகத்தில் பங்கேற்று தில்லைகாளியை வழிபட்டுச்சென்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments