தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத விளம்பர திமுக அரசை கண்டித்து, திருச்சியில் சத்துணவு ஊழியர்கள் தொடர் மறியல் – ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 313வது தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பணியைப் புறக்கணித்து 1000க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை கைது செய்தனர்.
போராட்டத்தின் போது பேசிய சங்க நிர்வாகிகள்,
“சத்துணவு பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் ஓட்டு மொத்தம் தமிழக அளவில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகளாக உள்ளது. வரவிருக்கும் தேர்தலை தமிழக முதலமைச்சர் கருத்தில் கொண்டு, எங்களது நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் போராட்டம் மேலும் தீவிரமடையும்” என கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments