திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நவல்பட்டு, அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி 59/24, க.பெ. ரெங்கராஜ். என்பவர் கடந்த 15.05.24 அன்று சுமார் 1930 மணியளவில், தனது வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டு, மறுநாள் சுமார் 0630 மணியளவில் வீடு திரும்பியபோது. அடையாளம் தெரியாத நபர்கள் மேற்படி வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பூட்டிய

பீரோவிலிருந்து 06 சவரன் தங்க நகைகளை திருடி சென்றதாக பாதிக்கப்பட்ட ராஜலட்சுமி (59) என்பவர் கொடுத்த புகாருக்கு நவல்பட்டு காவல் நிலைய குற்ற எண். 76/24, U/s 457, 380 IPC ன் படி 17.05.2024 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் 1.சச்சின் 25/26, (HS No. 01/24), த.பெ. ரமேஷ், குறிஞ்சி தெரு. பூலாங்குடி காலனி, நவல்பட்டு, 2. வின்சென்ட் சஞ்சய் 25/26, த.பெ. குமார், பர்மா காலனி, நவல்பட்டு என்பவர்கள் 19.05.24 மற்றும் 31.05.24 அன்று கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர். இவ்வழக்கின் விசாரணையானது திருச்சி மாவட்ட மூன்றாவது குற்றவியல் நீதிமன்றத்தில் (JM III) நடைபெற்று வந்தது.

மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக திரு.வெங்கடேஷ், ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (20.01.2026) திருச்சி மாவட்ட மூன்றாவது குற்றவியல் நீதிமன்ற (JM III) நீதிபதி திரு.முகமது சுஹைல் அவர்கள் எதிரிகள் 1.சச்சின் 25/26, (HS No. 01/24), த.பெ. ரமேஷ், குறிஞ்சி தெரு, 2. வின்சென்ட் சஞ்சய் 25/26, த.பெ. குமார். பர்மா காலனி, நவல்பட்டு என்பவர்களுக்கு 02 ஆண்டு கால சிறை தண்டனையும், தலா ரூபாய். 2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த நவல்பட்டு காவல் நிலைய நீதிமன்ற காவலர் திரு. ஜேம்ஸ் செல்வராஜ். என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments