திருச்சி துவாக்குடியில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, சுதேசி விழிப்புணர்வு இயக்கம் மற்றும் திருச்சி மாவட்ட சிறு தொழிற்சாலைகள் குறு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, மினி மாரத்தான் போட்டியை
கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ… ஒரு நண்பர் குறிப்பிட்டார் என்னையும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரெங்கராஜன் குமாரமங்கலத்தையும் ஒப்பிட்டு பேசினார். ரங்கராஜன் குமாரமங்கலம் மூத்த அரசியல்வாதி மூத்த அமைச்சர் நான் எல்கேஜி ஸ்டுடென்ட் முதல் முறையாக எம்.பி .யாகி உள்ளேன். அவரை என்னுடன் ஒப்பிட்டு பேசுவது சரியாக இருக்காது. பாராளுமன்ற

தேர்தலில் வெற்றி பெற்று நான் செய்தியாளர்களை சந்தித்த பொழுது
நான் மதிமுக கிடையாது இந்தியா கூட்டணி கிடையாது
என்னை எதிர்த்துப் போட்டிட்டவர்களுடன் இணைந்து திருச்சி பாராளுமன்றத்திற்கு தேவையான அனைத்தையும் செயல்படுத்துவேன் என்றே நான் குறிப்பிட்டேன என பேசினார்.
பின்னர்
தொடர்ந்து எம்பி துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது:
திருச்சியை பொறுத்தவரை பெல் நிறுவனத்தை நம்பி நிறைய சிறு நிறுவனங்கள் இயங்கி வந்தன.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சில நிறுவனங்கள் ஆர்டர் பற்றாக்குறையால் நலிவடைந்தது.

தற்பொழுது பெல் நிறுவனத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஆர்டர் உள்ளது.
சுமார் பத்து வருடங்களுக்கு இந்த ஆர்டர் மூலம் பெல் நிறுவனமும் அதை சார்ந்த துணை நிறுவனங்களும் இயங்க வாய்ப்பு உள்ளது.
தற்பொழுது புதிய தொழிற்நிறுவனங்கள் திருச்சியில் அமைய உள்ளன.
அதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு எம்பியாக என்ன செய்ய இயலுமோ அத்தனை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.

விபத்துகள் நடக்கக்கூடிய இடங்களான ஜி.கார்னர் மற்றும் சஞ்சீவி நகர் பகுதியில் விபத்தினை குறைக்கவும், அந்த பகுதியில் பாலம் அமைக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். சஞ்சீவி நகர் பகுதியில் பாலம் அமைக்க அனுமதி கிடைத்துள்ளது.
அதேபோல் திருச்சி விமான நிலையத்தில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் சூழ்நிலையை உருவாக்கி உள்ளேன்.
சுமார் 18 மாவட்டங்களுக்கு உட்பட்ட இ எஸ் ஐ யின் மண்டல துணை நிறுவனம் சேலத்தில் உள்ளது.

தொடர் முயற்சி காரணமாக தற்பொழுது திருச்சிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் திருச்சியில் அமைய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சட்டமன்றத் தொடர் கூட்டத்தில் ஆளுநர் வெளிநடப்பு செய்தது குறித்து கேள்விக்கு,
சட்டமன்ற கூட்டத்தொடருக்கு என்று சில விதிகள் உள்ளது. அதன்படி தேசிய கீதம் நிகழ்ச்சி இறுதியில் தான் பாடப்படும்.
கடந்த முறை இதே பிரச்சினையை தான் ஆளுநர் எழுப்பினார் தற்பொழுதும் அதே பிரச்சனையை மீண்டும் கொண்டு வருகிறார். ஆளுநரை பொறுத்தவரை தமிழ்நாடு மட்டுமல்லாது மாநில

அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு நல்ல கருத்துக்களை கூற வேண்டும் ஆனால், பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் தொடர்ந்து மாநில அரசுக்கு இடையூறு ஏற்படுத்த வருகின்றனர்.
இங்கு இருக்கக்கூடிய ஆளுநர் மாநில அரசுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருவதுடன் திராவிட இயக்கத்தையும், தமிழ்நாட்டில் பாரம்பரியத்தையும் கொச்சையாக பேசி வருகிறார். தொடர்ந்து பல முறை வரலாற்றை திரித்து பேசியிருக்கிறார். இவர் (ஆளுநர்) ஆர்.எஸ்.எஸ்ன் பிரச்சார பீரங்கியாக பார்க்கிறேன் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments