திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்றத்தில், உதவி அரசு வழக்கறிஞர் (Assistant Public Prosecutor – APP) தேர்வினை முன்னிட்டு, வழக்கறிஞர்களுக்கான சிறப்பு இலவச சட்ட பயிற்சி வகுப்பு வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் சுற்றறிக்கையின்படி, ‘திருச்சி மாவட்ட நீதிமன்ற கல்வி வட்டம்’ (Trichy District Court Study Circle) சார்பில் இந்தப் பயிற்சி வகுப்பு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருச்சி குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க (CCAA) நிர்வாகிகள் செய்துள்ளனர்.
இந்தச் சிறப்புப் பயிற்சி முகாமினை திருச்சி மாவட்ட நீதிபதி மாண்புமிகு திரு. M. கிறிஸ்டோபர் அவர்கள் தலைமை தாங்கி முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

தலைப்பு: ‘குற்றம் சார்ந்த சட்டவியலில் உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புகள்’ (Recent Supreme Court Cases on Criminal Jurisprudence).
பயிற்சியாளர்: மதுரை சுகுணா (SU-KU-NA) http://www.sukunalawcoaching.in சட்ட அகாடமியின் ஆசிரியரும், பிரபல வழக்கறிஞருமான திரு. S. வைரமுத்து அவர்கள் இப்பயிற்சியினை வழங்க உள்ளார்.
வரும் ஜனவரி 23, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, திருச்சி புதிய நீதிமன்ற வளாகத்தில் உள்ள 4-வது மாடி கூட்ட அரங்கில் (Meeting Hall) இப்பயிற்சி நடைபெறும்.

சமீபகாலமாக சட்டத் துறையில் உச்ச நீதிமன்றம் வழங்கி வரும் முக்கியத் தீர்ப்புகள் மற்றும் சட்ட நுணுக்கங்கள் குறித்து APP தேர்வுக்குத் தயாராகும் வழக்கறிஞர்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த வகுப்பு அமையும்.

இந்த இலவசப் பயிற்சி வகுப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் திரு. P. V. வெங்கட் (9842598884) அவர்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments